Advertisement

சென்னையில் தக்காளி வரத்து அதிகம் ... விலை குறைந்தது

By: vaithegi Wed, 28 June 2023 09:18:02 AM

சென்னையில் தக்காளி வரத்து அதிகம்   ...  விலை குறைந்தது

சென்னை: தக்காளி விலை குறைந்தது ......... தக்காளி விளைச்சல் மற்றும் வரத்து அதிகமாக இருந்தால் அதன் விலை குறைந்து காணப்படும்.ஆனால் அதே சமயம் தக்காளி விளைச்சல் குறைந்து வரத்து குறையும் பட்சத்தில் தக்காளியின் விலை உச்சத்தை அடையும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே தான்.

கடந்த ஒரு மாத காலமாக விளைச்சல் அதிகரிப்பால் தக்காளி விலை கிலோ 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து இச்சூழலில் சென்னை கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி 80 முதல் 120 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

கடந்த 2 நாட்களில் தக்காளியின் விலை ஆனது 60 ரூபாய் அதிகரித்துள்ளது. .இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிப்படைந்து உள்ளனர்.

tomato,coimbatore ,தக்காளி ,கோயம்பேட்

இந்நிலையில் சென்னை, கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி 10 ரூபாய் குறைந்து ரூ.70க்கு விற்பனையாகி கொண்டு வருகிறது. நேற்று தக்காளி கிலோ ரூ.80 வரை விற்கப்பட்ட நிலையில் விலை குறைந்துள்ளது.

மேலும் அத்துடன் புறநகர் பகுதிகளில் சில்லறை விற்பனையில் இன்று 80 முதல் 90 ரூபாய் வரை தக்காளி விற்பனை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :
|