Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் இன்று தக்காளி விலை கிலோவுக்கு 20 ரூபாய் குறைந்து, ஒரு கிலோ 110 ரூபாய்க்கு விற்பனை

சென்னையில் இன்று தக்காளி விலை கிலோவுக்கு 20 ரூபாய் குறைந்து, ஒரு கிலோ 110 ரூபாய்க்கு விற்பனை

By: vaithegi Thu, 13 July 2023 10:48:50 AM

சென்னையில் இன்று தக்காளி விலை கிலோவுக்கு 20 ரூபாய் குறைந்து, ஒரு கிலோ 110 ரூபாய்க்கு விற்பனை

சென்னை: கடந்த சில வாரங்களாகவே தக்காளியின் விலை தொடர்ந்து உயர்ந்து காணப்படுகிறது. வட மாநிலங்களில் கனமழை மற்றும் வரத்து குறைவு காரணமாக இந்த விலை ஏற்றம் இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்து கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த விற்பனையில் தக்காளி நேற்றைய விலையான 130 ரூபாயிலிருந்து 20 ரூபாய் குறைந்து கிலோ ரூ.110 க்கு இன்று விற்பனை செய்யப்படுகிறது. கோயம்பேட்டில் சில்லறை விலையில் தக்காளி கிலோ ரூ.120 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

tomato,sale ,தக்காளி ,விற்பனை

இதேபோன்று கடந்த சில வாரங்களாக ஏறுமுகத்திலிருந்த சின்ன வெங்காயம் வரத்து உயர்ந்து உள்ளதால் கோயம்பேடு மொத்த விற்பனையில் நேற்று கிலோ ரூ.200 விற்பனை செய்யப்பட்டது. இன்று கிலோவுக்கு 30 ரூபாய் குறைந்து கிலோ 170 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதேபோல் பச்சை மிளகாய் கிலோ ரூ.50 விற்கப்படுகிறது.

மேலும் இஞ்சி 1 கிலோ ரூ.260க்கும், பீன்ஸ் 1 கிலோ ரூ.90க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதையடுத்து மற்ற காய்கறி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் தொடருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.மேலும் அத்துடன் தக்காளி விலையேற்றம் இன்னும் 1 மாதத்திற்கு நீட்டிக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

Tags :
|