Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீனாவில் நாள் ஒன்றுக்கு 30,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா

சீனாவில் நாள் ஒன்றுக்கு 30,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா

By: vaithegi Sat, 26 Nov 2022 6:02:10 PM

சீனாவில் நாள் ஒன்றுக்கு 30,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா

சீனா: சீனாவில் மீண்டும் பாதிப்பு எண்ணிக்கை உயர்வு .... கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் சீன நாட்டில் இருந்து பரவிய கொரோனா தொற்று உலக நாடுகளையே அச்சுறுத்தியது. சுகாதாரத்துறை எடுத்த பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகளின் விளைவால் பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்தது.

இதையடுத்து ஒரு வழியாக மக்கள் பாதிப்பிலிருந்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் வேளையில் தற்போது கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் மீண்டும் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. அந்த நாட்டில் நாள் ஒன்றுக்கு 30,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது.

corona,china ,கொரோனா,சீனா

இந்த நிலையில் பெய்ஜிங் உட்பட முக்கிய நகரங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதிகம் பாதிப்புள்ள குவாங்ஜியோ மாகாணத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மீண்டும் கொரோனா வேகமெடுப்பதன் காரணம் பற்றி விசாரித்த போது சீனாவில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி மருந்தின் வீரியம் குறைவாக உள்ளது. அதனால் தான் மீண்டும் கொரோனா பரவல் உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

Tags :
|