Advertisement

சீனவில் புதிய பாதிப்பு... கொரோனா பரிசோதனை தீவிரம்

By: vaithegi Thu, 07 July 2022 1:12:42 PM

சீனவில் புதிய பாதிப்பு...   கொரோனா பரிசோதனை தீவிரம்

பீஜிங்: சீனாவில் 2019-ம் ஆண்டு டிசம்பரில் முதலில் தோன்றிய கொரோனா தொற்று இன்னும் முடிவுக்கு வராமல் தொடர்கிறது. ஹாங்காங், மெக்காவ் மற்றும் பிற சீன நகரங்களில் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.

இந்நிலையில் தற்போது சீனாவின் ஷாங்காய், பீஜிங் நகரங்களில் புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. ஷாங்காய் நகரம் தற்போதுதான் கட்டுப்பாடுகளில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பிய சூழ்நிலையில், ஒரு முக்கிய சர்வதேச வணிக மையத்தில் உள்ள கரோக்கி பார்லரில் தொற்று ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

corona,testing ,கொரோனா ,பரிசோதனை

இது ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடையே தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தத் தவறியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற அனைத்து விற்பனை நிலையங்களும் வணிகத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் பீஜிங்கிலும் இரவு விடுதி ஒன்றில் கொரோனா வெடிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இச்சம்பவங்களை அடுத்து ஷாங்காயிலும், பீஜிங்கிலும் குறிப்பிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை மிக தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.

Tags :
|