Advertisement

சீனாவில் தற்போது மீண்டும் தொற்று பாதிப்பு உயர்வு

By: vaithegi Wed, 16 Nov 2022 2:59:03 PM

சீனாவில் தற்போது மீண்டும் தொற்று பாதிப்பு உயர்வு

பெய்ஜிங்: கொரோனா வைரஸ் முதன் முதலாக கண்டறியப்பட்ட சீனாவில் தற்போது மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி விட்டது. கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பதால் சீனாவில் மீண்டும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன.

இதனை அடுத்து ஜிரோ கோவிட் கொள்கையை பின்பற்றி வரும் சீனா, சிறிய பாதிப்பு என்றாலும் ஒட்டு மொத்த பகுதியையும் முடக்கி கொரோனா பரவலை தடுத்து கொண்டு வருகிறது.

அந்த வகையில், சீனாவின் பிரபலமான பெக்கிங் பல்கலைக்கழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டதால் பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளது.

china,corona ,சீனா,கொரோனா

இதனை அடுத்து மாணவர்கள் அவசியம் இன்றி வெளியே வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டுள்ளன.

மேலும் பெய்ஜிங்கில் மட்டும் 350 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனா முழுவதிலும் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு இருக்கிறது.

Tags :
|