Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொலம்பியாவில் அதிகரிக்கும் கொரோனா...பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்தது

கொலம்பியாவில் அதிகரிக்கும் கொரோனா...பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்தது

By: Monisha Thu, 20 Aug 2020 12:19:23 PM

கொலம்பியாவில் அதிகரிக்கும் கொரோனா...பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்தது

கொலம்பியாவில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்துள்ளது.

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியு பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. நோய் தொற்றை கட்டுக்குள் கொண்டுவர உலக நாடுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 2.25 கோடி பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1.52 கோடியாக அதிகரித்துள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7.89 லட்சம் ஆக அதிகரித்துள்ளது.

colombia,corona virus,infection,death,treatment ,கொலம்பியா,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் கொலம்பியா 8-வது இடத்தில் உள்ளது. கொலம்பியாவில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்துள்ளது.

கொல்ம்பியாவில் ஒரே நாளில் 13 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு சிக்கி பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

கொரோனா தாக்குதலால் 360-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, அங்கு கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 16 ஆயிரத்தை நெருங்குகிறது. கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 3.25 லட்சத்தை தாண்டியுள்ளது.

Tags :
|