Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா பீதிக்கு இடையே கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு இன்று தொடங்கியது!

கொரோனா பீதிக்கு இடையே கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு இன்று தொடங்கியது!

By: Monisha Thu, 25 June 2020 11:36:37 AM

கொரோனா பீதிக்கு இடையே கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு இன்று தொடங்கியது!

கர்நாடகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போதும் முன்பை விட கர்நாடகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. ஆயினும் மாநிலத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு 25-ந் தேதி (அதாவது இன்று) நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் இந்த மாதத்தின் தொடக்கத்தில் அறிவித்தார்.

அதன்படி, கொரோனா பீதிக்கு இடையே கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்கியது. இதற்காக மாநிலம் முழுவதும் 3,209 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் 8 லட்சத்து 48 ஆயிரத்து 203 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். இதில் 330 மையங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளனன.

karnataka,sslc examination,coronavirus,students,teachers ,கர்நாடகம்,எஸ்எஸ்எல்சி தேர்வு,கொரோனா வைரஸ்,மாணவர்கள்,ஆசிரியர்கள்

மாணவர்களின் உடல்நிலையை பரிசோதிக்க 7,115 தெர்மல் ஸ்கேனர் கருவிகளை தேர்வு மையங்களுக்கு அரசு கொடுத்துள்ளது. தேர்வு மையங்களில் மாணவர்களின் உடல்நிலையை பரிசோதனை செய்ய 5,755 சுகாதார குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்வு பணிகளை கவனிக்க 81 ஆயிரத்து 265 அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். 5,758 ஆசிரியர்கள் தயாராக வைக்கப்பட்டு உள்ளனர். இதற்கிடையே இன்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்க உள்ள நிலையில் மாநில பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் பெங்களூருவில் நேற்று ஒரு தேர்வு மையத்திற்கு சென்று தேர்வுக்கான ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தேர்வு தினமும் காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணி வரை நடைபெறும்.

இதற்கிடையே கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :