Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கடலூர் மாவட்டத்தில் இதுவரை 8083 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

கடலூர் மாவட்டத்தில் இதுவரை 8083 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

By: Monisha Sat, 22 Aug 2020 10:17:09 AM

கடலூர் மாவட்டத்தில் இதுவரை 8083 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 7 ஆயிரத்து 841 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியானதில் புதிதாக 242 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் என்.எல்.சி. மருத்துவமனை டாக்டர், கடலூர் அரசு மருத்துவமனை செவிலியர், 2 மருத்துவமனை பணியாளர்கள், 2 கர்ப்பிணிகள், பிரசவித்த தாய், கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 83 பேர், அறுவை சிகிச்சைக்கு முன்பு உள்ள 3 நோயாளிகளுக்கும் பாதிப்பு உறுதியானது.

இவர்களை தவிர கடலூர், கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த 3 போலீசார், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த 138 பேர், சென்னையில் இருந்து கடலூர், மங்களூர் வந்த 3 பேர், பெங்களூருவில் இருந்து நெய்வேலி என்.எல்.சி., நல்லூரை சேர்ந்த 4 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. நேற்று முன்தினம் வரை 91 பேர் உயிரிழந்த நிலையில், நேற்று 5 பேர் உயிரிழந்தனர்.

cuddalore district,corona virus,infection,treatment,kills ,கடலூர் மாவட்டம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

நேற்று ஒரே நாளில் 383 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர். இதுவரை 5 ஆயிரத்து 233 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர். கொரோனா பாதித்த 2 ஆயிரத்து 497 பேர் கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும், 262 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டத்தில் இதுவரை 70 ஆயிரத்து 54 பேருக்கு பரிசோதனை செய்ததில் 8083 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 ஆயிரத்து 570 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.

Tags :