Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவிற்கு ஆதரவாக, சீனாவுக்கு எதிராக படைகளை அனுப்புவோம்; அமெரிக்காவின் அதிரடி அறிவிப்பு

இந்தியாவிற்கு ஆதரவாக, சீனாவுக்கு எதிராக படைகளை அனுப்புவோம்; அமெரிக்காவின் அதிரடி அறிவிப்பு

By: Nagaraj Sun, 28 June 2020 4:11:39 PM

இந்தியாவிற்கு ஆதரவாக, சீனாவுக்கு எதிராக படைகளை அனுப்புவோம்; அமெரிக்காவின் அதிரடி அறிவிப்பு

இந்தியாவிற்கு ஆதரவாகவும், சீனாவிற்கு எதிராகவும் அமெரிக்கா தனது படைகளை அனுப்பும் என்று அமெரிக்க அரசு முதல் முறையாக அறிவித்துள்ளது.

லடாக் எல்லைப் பகுதியான கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 15 ஆம் தேதி இரவு சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இரு நாடுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தையையும் மீறி சீனா தனது கட்டமைப்புகளை எல்லையில் நிறுத்தியிருப்பதாக செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்தன. இதனால் இந்தியா சீனா எல்லையில் பதற்றம் நீடித்துள்ளது.

இந்நிலையில் இந்தியா, மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்குச் சீன ராணுவத்தின் அச்சுறுத்தல் அதிகமாகி வருவதால், உலக அளவில் படைகளை நிறுத்த அமெரிக்கா பரிசீலனை செய்து வருவதாக அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

america,support,india,china,big trouble ,அமெரிக்கா, ஆதரவு, இந்தியா, சீனா, பெரிய கலக்கம்

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: அமெரிக்கா தனது படைகளை ஜெர்மனியில் இருந்து விலக்கிக் கொண்டு இருக்கிறது. எங்கே படைகள் தேவையோ அங்கே அமெரிக்கா இனி படைகளை அனுப்பும். முக்கியமாக சீனாவின் பிஎல்ஏ ராணுவம் எங்கே இருக்கிறதோ அங்கே படைகளை அனுப்புவோம்.

ஏற்கனவே ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா விஷயத்தில் தலையிட போவதில்லை என்று கூறிவிட்ட நிலையில், தற்போது அமெரிக்கா வெளிப்படையாக தனது ஆதரவை இந்தியாவிற்கு வழங்கி உள்ளது. இந்தியாவிற்கு எதிராக ரஷ்யா களமிறங்கும் என்று சீனா எதிர்பார்த்த ஏமாந்த நிலையில் அமெரிக்காவில் இந்த அறிவிப்பு சீனாவுக்கு பெரிய கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
|
|