Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரான்ஸில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டது அரசு: ஏன் தெரியுங்களா?

பிரான்ஸில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டது அரசு: ஏன் தெரியுங்களா?

By: Nagaraj Sun, 08 Oct 2023 9:04:25 PM

பிரான்ஸில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டது அரசு: ஏன் தெரியுங்களா?

பிரான்ஸ்: மூட்டைப்பூச்சி தொல்லையால் விடுமுறை... பிரான்ஸில் மூட்டைப்பூச்சி தொல்லைக் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸில் மூட்டை பூச்சிகளின் தொல்லை அதிகரித்துள்ளதால் அந்த நாட்டு மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். முட்டை பூச்சிகளை கட்டுப்படுத்துவது குறித்து இந்த 2 நாட்களில் மட்டும் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களை பிரான்ஸ் அரசாங்கம் நடத்தியுள்ளது.

france,college,students,holiday,moth,people ,பிரான்ஸ், கல்லூரி, மாணவர்கள், விடுமுறை, மூட்டைப்பூச்சி, மக்கள்

படையெடுக்கும் மூட்டை பூச்சிகளால் 17 கல்லூரிகளுக்கும், 7 பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மாணவர்களின் கல்வி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸில் அனைத்து குடும்பங்களில் பத்தில் ஒரு குடும்பத்தினர் கடந்த சில ஆண்டுகளாக மூட்டைப் பூச்சி பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும், வழக்கமாக பல நூறு யூரோக்கள் செலவிட வேண்டும் என்பதுடன், இது அடிக்கடி செய்ய வேண்டியுள்ளதால் வேதனையாக உள்ளது என பிரான்ஸ் மக்கள் தெரிவிக்கின்றனர்.

Tags :
|
|