Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,249 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,249 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

By: vaithegi Wed, 22 June 2022 11:53:28 AM

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,249 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியா: இந்தியாவில் ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவலின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இது நான்காம் அலை தாக்குதலாக இருக்குமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

நாட்டின் தினசரி பாதிப்பு 12,000ஆக உயர்ந்து வரும் நிலையில் மத்திய மாநில அரசுகள் கொரோனா நோய் தடுப்பு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்த வகையில் மீண்டும் மக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே, கொரோனா பரவல் அதிகமுள்ள கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தடுப்பு பணிகள் தற்போது தீவிரமடைந்துள்ளது. மக்கள் விரைந்து 2 டோஸ் தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை மக்களை வலியுறுத்தி வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12,249 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,33,31,645 ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பை தொடர்ந்து உயிரிழப்பும் உயர்ந்து வருகிறது. நேற்று மட்டும் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி சுமார் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

corona,vaccine,corona infection,booster vaccine ,
கொரோனா ,தடுப்பூசி,கொரோனா தொற்று , பூஸ்டர் தடுப்பூசி

இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 5,24,903 ஆக அதிகரித்துள்ளது. இதற்கு மத்தியில் தொற்றில் இருந்து ஒரே நாளில் 9,862 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.60% ஆக உயர்ந்துள்ளது. மேலும் எண்ணிக்கை 4,27,25,055 ஆக உயர்ந்துள்ளது.

இதை தொடர்ந்து சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.19% ஆகவும் உயிரிழந்தோர் விகிதம் 1.21% ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை இந்தியாவில் 1,96,45,99,906 கோடி பேர் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 12,28,291 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலைமையில் தடுப்பூசிகள் மட்டுமே மக்கள் கொரோனாவிலிருந்து தப்பிக்க சிறந்த மருந்தாக உள்ளது. 2 டோஸ் தடுப்பூசியை தொடர்ந்து பூஸ்டர் தடுப்பூசியும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



Tags :
|