Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் நேற்று மட்டும் 15,940 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் நேற்று மட்டும் 15,940 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

By: vaithegi Sat, 25 June 2022 11:26:08 AM

இந்தியாவில் நேற்று  மட்டும்  15,940 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியா: உலகம் முழுவதிலும் மீண்டும் கொரோனா பாதிப்பு மிக அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தற்போது மட்டுமே இந்தியா முழுவதும் கிட்டதட்ட 5 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உயிரிழந்துள்ளனர். மேலும், 4 கோடிக்கு அதிகமானோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே இந்தியாவில் 15,940க்கும் மேல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புதிதாக மட்டும் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே 12,425 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். நேற்றைய தினத்தோடு ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 98.58% ஆக உயர்ந்துள்ளது மற்றும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோர் விகிதம் 1.21% ஆக குறைந்துள்ளது.

corona,mask ,கொரோனா ,மாஸ்க்

மேலும், தற்போது கொரோனா தொற்றால் சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.21% ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் தற்போதைக்கு கொரோனா தொற்றுக்கு ஆளாகி 91779 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டுமே 15,73,341 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா பரவல் முற்றிலுமாக குறையும் வரைக்கும் கொரோனா கட்டுப்பாடுகளை மக்கள் கடைபிடிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாஸ்க் அணியாமல் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags :
|