Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே 16,167 பேருக்கு கொரோனா உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே 16,167 பேருக்கு கொரோனா உறுதி

By: vaithegi Mon, 08 Aug 2022 11:52:39 AM

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே 16,167 பேருக்கு கொரோனா உறுதி

இந்தியா: இந்தியாவில் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்த படியே தான் இருந்து கொண்டு வருகிறது. இதுவரையிலும் நாட்டில் கொரோனா தொற்றுக்கு ஆளாகி 5 லட்சத்திற்கும் மேலானோர் உயிரிழந்துவிட்டனர். மேலும், 4 கோடி பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்கள் மற்றும் குணமடைந்தவர்களின் விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது.

corona,india ,கொரோனா ,இந்தியா

அந்த வகையில் 24 மணி நேரத்தில் 16,167 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரைக்கும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,41,61,899 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த சில நாட்களாகவே இந்தியாவில் இறப்பு விகிதமும் அதிகரித்து வருகிறது. அதாவது, கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே 41 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளனர். இதனால், நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,26,730 ஆக அதிகரித்துள்ளது.

அதே போன்று , நேற்று ஒரே நாளில் 15,549 பேர் சிகிச்சையில் குணமாகி வீட்டிற்கு சென்றுள்ளனர். மேலும், 1,35,510 பேர் தற்போது தொற்று பாதிப்பினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதாவது, இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் 0.31% பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவுதலின் வீதம் உயர்ந்து வருவதால் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் மிகுந்த ஆர்வம் காட்டப்பட்டு வருகிறது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டுமே 34,75,330 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Tags :
|