Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து 2.58 லட்சம் பேர் குணம்

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து 2.58 லட்சம் பேர் குணம்

By: Karunakaran Wed, 24 June 2020 2:07:57 PM

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து 2.58 லட்சம் பேர் குணம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்தியாவில் இதுவரை 456183 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் உயிரிழப்பு விகிதம் 3.2 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் இதுவரை 258685 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இதனால் இந்தியாவில் கொரோனா குணமடையும் விகிதம் 56.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்புடைய 183022 பேர் நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டிலே கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.39 லட்சமாக உயர்ந்துள்ளது.

coronavirus,india,corona recover,maharastra ,இந்தியா,கொரோனா பாதிப்பு,கொரோனா வைரஸ், மகாராஷ்டிரா

கொரோனா பாதிப்பில் இரண்டாவது இடத்தில் இருந்த தமிழகத்தை டெல்லி மிஞ்சியுள்ளது. டெல்லியில் இதுவரை 66602 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 6531 பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டாவது இடத்தில் உள்ள டெல்லியில் கொரோனா பாதிக்கப்பட்டு 2301 பேர் உயிரிழந்துள்ளனர்.

மூன்றாவது இடத்தில் உள்ள தமிழகத்தில் 64603 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனாவால் 833 பேர் பலியாகி உள்ளனர். ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதாலும், கொரோனா பரிசோதனைகள் அதிகரித்ததாலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Tags :
|