Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் 51 ஆயிரத்து 706 பேர் ஒரே நாளில் கொரோனாவிலிருந்து குணம்

இந்தியாவில் 51 ஆயிரத்து 706 பேர் ஒரே நாளில் கொரோனாவிலிருந்து குணம்

By: Karunakaran Thu, 06 Aug 2020 1:05:15 PM

இந்தியாவில் 51 ஆயிரத்து 706 பேர் ஒரே நாளில் கொரோனாவிலிருந்து குணம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்தியாவில் நேற்று தொடர்ந்து 7-வது நாளாக கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியது. இருப்பினும் கொரோனாவிலிருந்து குணம் அடைவோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவது ஆறுதலையும், நம்பிக்கையையும் அளிப்பதாக அமைந்துள்ளது.

இந்நிலையில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரு நாளில் இந்தியாவில் 51 ஆயிரத்து 706 பேர், கொரோனாவிலிருந்து குணம் அடைந்து தங்கள் வீடுகளுக்கு நிம்மதியுடன் திரும்பினர். இதனால் இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை 12 லட்சத்து 82 ஆயிரத்து 215 ஆக அதிகரித்து உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

india,corona cured,corona virus,corona prevalence ,இந்தியா, கொரோனா மீட்பு, கொரோனா வைரஸ், கொரோனா பாதிப்பு

இந்தியாவில் குணம் அடைந்தோர் விகிதமும் தொடர்ந்து அதிகரித்து 67.19 சதவீதம் ஆகவுள்ளது. நேற்று ஒரே நாளில் நாட்டில் கொரோனாவுக்கு 857 பேர் உயிரிழந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 39 ஆயிரத்து 795 ஆக உயர்ந்துள்ளது. ஆனாலும் பலி விகிதம் 2.09 சதவீதமாக குறைந்துள்ளது சற்று ஆறுதல் அளிப்பதாக இருக்கிறது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 19 லட்சத்தை கடந்துள்ளது. இருப்பினும் கொரோனாவிலிருந்து குணம் அடைந்தோர் எண்ணிக்கையும் 12 லட்சத்து 82 ஆயிரத்து 215 ஆக அதிகரித்துள்ளது. தற்போது நாட்டில் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் கொரோனா பாதிப்புடைய 6 லட்சத்து 95 ஆயிரத்து 972 பேர் மட்டுமே சிகிச்சை பெறுகின்றனர்.

Tags :
|