Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் தீவிரம் அடையும் கொரோனா வைரஸ்: ஒரே நாளில் 9304 பேருக்கு தொற்று உறுதி

இந்தியாவில் தீவிரம் அடையும் கொரோனா வைரஸ்: ஒரே நாளில் 9304 பேருக்கு தொற்று உறுதி

By: Monisha Thu, 04 June 2020 10:29:18 AM

இந்தியாவில் தீவிரம் அடையும் கொரோனா வைரஸ்: ஒரே நாளில் 9304 பேருக்கு தொற்று உறுதி

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று கடும் தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஊரடங்கு கட்டுப்பாடு, கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெறுகின்றன. பொருளாதார நடவடிக்கைகளுக்காக ஊரடங்கு கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்துவதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது.

இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் மொத்தம் 2 லட்சத்து 16 ஆயிரத்து 919 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவில், கடந்த 24 மணி நேரத்தில் 9304 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் மராட்டிய மாநிலத்தில் மட்டும் 72 ஆயிரத்து 300 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். தமிழகத்தில் 25,872 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தேசிய தலைநகர் டெல்லியில் 22,132 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

india,coronavirus,coronal syndrome,curfew,immunization ,இந்தியா,கொரோனா வைரஸ்,கொரோனா அறிகுறி,ஊரடங்கு,நோய்த்தடுப்பு நடவடிக்கை

260 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6075 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2,465 பேர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். குஜராத்தில் 1,092 பேரும், டெல்லியில் 556 பேரும், மத்திய பிரதேசத்தில் 364 பேரும், மேற்குவங்காளத்தில் 335 பேரும், உத்தரபிரதேசத்தில் 222 பேரும், தமிழகத்தில் 208 பேரும், ராஜஸ்தானில் 203 பேரும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

இதுவரை 104107 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 3804 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 106737 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags :
|
|