Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் மட்டுமே கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இத்தனை வாட்ஸ்அப் கணக்குகள் நீக்கம்

இந்தியாவில் மட்டுமே கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இத்தனை வாட்ஸ்அப் கணக்குகள் நீக்கம்

By: vaithegi Mon, 02 Oct 2023 1:47:17 PM

இந்தியாவில் மட்டுமே கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இத்தனை வாட்ஸ்அப் கணக்குகள் நீக்கம்

இந்தியா: ஆகஸ்ட் மாதத்தில் மட்டுமே 74,20,748 வாட்ஸ்அப் கணக்குகள் நீக்கம் ...உலகம் முழுவதும் பில்லியன் கணக்கான பயனர்கள் Whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் பயனர்களின் அனுபவத்தை மேலும் சிறப்பாக்கும் வகையில் Whatsapp நிறுவனம் அவ்வப்போது அப்டேட்டுகளை வெளியிட்டபடி இருந்து கொண்டு வருகிறது.

அந்த வகையில், வீடியோ கால் மூலமாக ஸ்கிரீன் ஷேர் செய்வது, ஒருவருக்கு அனுப்பிய செய்தியை குறிப்பிட்ட காலத்திற்குள் எடிட் செய்யும் வசதி, தனித்துவமான எமோஜிக்கள், தெரியாத நபர்களிடமிருந்து வரும் காலை mute செய்யும் வசதி, அவதார் வடிவிலான எமோஜி என ஏகப்பட்ட அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகி கொண்டே இருக்கிறது.

whatsapp accounts,india ,வாட்ஸ்அப் கணக்குகள்,இந்தியா

இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 74 லட்சத்து 20 ஆயிரத்து 748 வாட்ஸ் அப் அக்கவுண்டுகள் Ban செய்யப்பட்டு உள்ளதாக whatsapp நிறுவனம் அறிவித்துள்ளது.இதையடுத்து அதில் 14,767 whatsapp கணக்குகளில் திருட்டு, பணம் பறித்தல் உள்ளிட்ட சம்பவங்களால் Ban செய்யப்பட்டு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாட்ஸ் அப் செயலியின் மூலமாக மற்றொருவரிடம் பணம் பறித்தல், பாலியல் ரீதியாக துன்புறுத்துதல் உள்ளிட்டவைகள் காரணமாக அக்கவுண்டுகள் Ban செய்யப்பட்டு கொண்டு வருகிறது.

Tags :