Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜம்மு - காஷ்மீரில் ராணுவத்தினர் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை

ஜம்மு - காஷ்மீரில் ராணுவத்தினர் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை

By: Nagaraj Sun, 14 June 2020 08:19:17 AM

ஜம்மு - காஷ்மீரில் ராணுவத்தினர் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை

கொரோனா பாதிப்பு யாருக்கும் இல்லை... ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் ராணுவம் தொடர்புடைய இடங்களில் 'கொரோனா' பாதிப்பு யாருக்கும் இல்லை என மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

ராணுவத்தின் வடக்கு பிராந்தியத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி லெப்டினென்ட் கலோனல் அபினவ் நவ்னீத் கூறியதாவது:

ஜம்மு - காஷ்மீர் லடாக் யூனியன் பிரதேசங்களில் பணியாற்றும் நம் ராணுவப் பிரிவில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. பாதிப்பு ஏற்படாமல் தடுக்கவும், பரவுவதை தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விடுமுறையில் இருந்து திரும்புவோர் மற்றப் பகுதிகளில் இருந்து வருவோருக்கு முழு பரிசோதனை செய்யப்படுகிறது.

corona vulnerability,military,full cooperation,corona ,கொரோனா பாதிப்பு, ராணுவத்தினர், முழு ஒத்துழைப்பு, கொரோனா

அவர்கள் தனிமைபடுத்தப்பட்டே பணியில் சேர்க்கப்படுகின்றனர். அதேபோல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளோருடன் நம் படையினர் தொடர்பு கொள்ளாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. முக கவசம் அணிவது கைகளை தூய்மைப்படுத்துவது என அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன.

கொரோனா விஷயத்தில் மாவட்ட மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறோம். ராணுவத்தின் வடக்கு பிராந்தியம் எப்போதும் எந்த சூழ்நிலையையும் சந்திக்க தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags :