ஜப்பானில் ஒரே நாளில் கொரோனாவால் 415 பேர் பலியானதாக தகவல்
By: Nagaraj Fri, 30 Dec 2022 10:02:21 AM
ஜப்பான்: ஒரே நாளில் கொரோனா தொற்றால் ஜப்பானில் 415 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்வலைகள ஏற்படுத்தி உள்ளது.
உலக நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகின்றது. இவ்வாறான நிலையில் ஜப்பானில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் 415 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் இது ஜப்பானில் ஒருநாளில் பதிவாகி இருக்கும் ஆக அதிக கொரோனா மரணம் ஆகும். விடுமுறைக் காலம் தொடங்கிவிட்ட நிலையில் ஜப்பானில் எட்டாவது முறையாகக் கொரோனா தொற்று பரவுகிறது.
இலங்கை முழுவதும் 20,000க்கும் அதிகமானவர்களுக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Tags :
japan |
corona |
death |
record |