Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாஸ்க் அணியாமல் வெளியில் வருபவர்களுக்கு அபராதம் விதிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாஸ்க் அணியாமல் வெளியில் வருபவர்களுக்கு அபராதம் விதிப்பு

By: vaithegi Tue, 21 June 2022 5:52:49 PM

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாஸ்க் அணியாமல் வெளியில் வருபவர்களுக்கு அபராதம் விதிப்பு

காஞ்சிபுரம் : தமிழகத்தில் ஜூன் மாத தொடக்கத்தில் இருந்தே கொரோனா பரவல் மீண்டும் சற்று அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை தற்போது 700 ஐ தாண்டி வருகிறது. இதனால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சம் அதிகரித்துள்ளது. இது கொரோனாவின் நான்காம் அலை தாக்குதலாக இருக்குமோ என்று எண்ணுகின்றனர்.

குறிப்பாக தலைநகர் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதே போல சென்னையை ஒட்டியுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் வேகமெடுத்துள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3951ஆக அதிகரித்துள்ளது.

அதனால் நோய்த் தடுப்பு பணிகளை மேற்கொள்ள சுகாதாரத்துறை உத்தரவிட்டது. இதன் பேரில் தற்போது அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

penalty,mask,corona ,அபராதம் ,மாஸ்க் ,கொரோனா

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கட்டுப்பாடுகள் அமல் படுத்தப்பட்டுள்ளது.அதன்படி ஒவ்வொருவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாமல் வெளியில் வெளியே வந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் பொது இடங்களில் ஒருவருக்கொருவர் 6 அடி தூரம் இடைவெளி விட்டு நிற்க வேண்டும்.

அனைத்து வணிக விற்பனை கூடங்கள் மற்றும் உணவகங்களின் நுழைவு வாயிலிலும் கிருமி நாசினி வைக்கப்பட வேண்டும். மேலும் உடல் வெப்பநிலையை கண்காணிக்க வேண்டும். வணிக வளாகங்களில் ஏசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருமண மண்டபங்களில் 100 நபர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும். இறப்பு வீடுகளில் 50 நபர்களுக்கு மேல் இருக்கக்கூடாது. பொதுமக்கள் அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசிகள் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags :
|