Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கர்நாடகத்தில் நேற்று ஒரேநாளில் 124 பேர் கொரோனாவுக்கு பலி

கர்நாடகத்தில் நேற்று ஒரேநாளில் 124 பேர் கொரோனாவுக்கு பலி

By: Monisha Mon, 17 Aug 2020 1:09:22 PM

கர்நாடகத்தில் நேற்று ஒரேநாளில் 124 பேர் கொரோனாவுக்கு பலி

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 19 ஆயிரத்து 926 ஆக இருந்தது. நேற்று ஒரே நாளில் புதிதாக 7,040 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 26 ஆயிரத்து 966 ஆக உயர்ந்திருக்கிறது. நேற்று மட்டும் 6 ஆயிரத்து 680 பேர் குணமடைந்துள்ளனர். மாநிலம் முழுவதும் இதுவரை 1 லட்சத்து 41 ஆயிரத்து 491 பேர் குணமடைந்து உள்ளனர். மாநிலம் முழுவதும் 81 ஆயிரத்து 512 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று பெங்களூரு நகரில் 2,131 பேருக்கும், மைசூருவில் 620 பேருக்கும், கலபுரகியில் 285 பேருக்கும், தார்வாரில் 268 பேருக்கும், பல்லாரியில் 381 பேருக்கும், கொப்பலில் 211 பேருக்கும், தட்சிண கன்னடாவில் 229 பேருக்கும், பாகல்கோட்டையில் 156 பேருக்கும், உடுப்பியில் 237 பேருக்கும், உத்தரகன்னடாவில் 61 பேருக்கும், பெலகாவியில் 478 பேருக்கும், விஜயாப்புராவில் 158 பேருக்கும், துமகூருவில் 169 பேருக்கும், மண்டியாவில் 91 பேருக்கும், ராய்ச்சூரில் 183 பேருக்கும், பீதரில் 119 பேருக்கும், தாவணகெரேயில் 218 பேருக்கும், பெங்களூரு புறநகரில் 87 பேருக்கும், சிக்பள்ளாப்பூரில் 98 பேருக்கும், கோலாரில் 90 பேருக்கும், குடகில் 25 பேருக்கும், சித்ரதுர்காவில் 71 பேருக்கும், சாம்ராஜ்நகரில் 36 பேருக்கும், ஹாசனில் 145 பேருக்கும், சிக்கமகளூருவில் 69 பேருக்கும், யாதகிரியில் 236 பேருக்கும், ராமநகரில் 32 பேருக்கும், ஹாவேரியில் 76 பேருக்கும், கதக்கில் 79 பேருக்கும், சிவமொக்காவில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

karnataka,corona virus,vulnerability,death,bangalore ,கர்நாடகம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,பெங்களூரு

மேலும் கர்நாடகத்தில் நேற்று ஒரேநாளில் 124 பேர் கொரோனா தொற்றுக்கு மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் பலி எண்ணிக்கை 3,963 ஆக உயர்ந்துள்ளது. பெங்களூருவில் 49 பேரும், மைசூருவில் 10 பேரும், பல்லாரியில் 9 பேரும், தட்சிண கன்னடாவில் 7 பேரும், தார்வார், துமகூருவில் 5 பேரும், சிக்கமகளூருவில் 4 பேரும், பெலகாவி, யாதகிரி, தாவணகெரே, கொப்பல், ராய்ச்சூர், விஜயாப்புரா, மண்டியாவில் தலா 3 பேரும், சிவமொக்கா, உத்தரகன்னடா, கதக், ஹாவேரி, ஹாசன், கலபுரகியில் தலா 2 பேரும், பீதர், சிக்கமகளூருவில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

பெங்களூருவில் இதுவரை 89 ஆயிரத்து 811 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பெங்களூருவில் இதுவரை 1,444 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். கர்நாடகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று 124 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|