Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கர்நாடகத்தில் அதிகரிக்கும் கொரோனா...ஒரே நாளில் 2,313 பேருக்கு பாதிப்பு உறுதி

கர்நாடகத்தில் அதிகரிக்கும் கொரோனா...ஒரே நாளில் 2,313 பேருக்கு பாதிப்பு உறுதி

By: Monisha Sat, 11 July 2020 10:23:42 AM

கர்நாடகத்தில் அதிகரிக்கும் கொரோனா...ஒரே நாளில் 2,313 பேருக்கு பாதிப்பு உறுதி

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்போர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. டெல்லி, மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், மத்தியபிரதேசம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகளவில் இருந்து வருகிறது.

இந்நிலையில் கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு அதிவேகமாக பரவி வருகிறது. பாதிப்பு தினசரி 2 ஆயிரத்தை கடந்து பதிவாகி வருகிறது. இதனால் கர்நாடக அரசு செய்வதறியாமல் திகைத்து வருகிறது. தலைநகர் பெங்களூருவில் நாளுக்கு நாள் பரவல் முந்தைய நாள் பாதிப்பைவிட அதிகமாக பதிவாகி வருகிறது.

கர்நாடகத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 2,313 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது மாநிலத்தில் கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 33 ஆயிரத்தை கடந்துள்ளது. பெங்களூருவில் வைரஸ் தொற்று பாதிப்பு 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இது கர்நாடக அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

india,corona virus,karnataka,vulnerability,bangalore ,இந்தியா,கொரோனா வைரஸ்,கர்நாடகம்,பாதிப்பு,பெங்களூரு

நேற்றைய பாதிப்பு குறித்து கர்நாடக சுகாதாரத்துறை கூறுகையில், கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 30 ஆயிரத்து 614 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் மாநிலத்தில் புதிதாக 2,313 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கர்நாடகத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 32 ஆயிரத்து 927 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு இதுவரை இல்லாத புதிய உச்சமாக ஒரே நாளில் 57 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை 13 ஆயிரத்து 836 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் நேற்று மட்டும் 1,003 பேர் அடங்குவர். புதிதாக கொரோனா பாதித்தோரில் பெங்களூரு நகரில் மட்டும் 1,447 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது

Tags :
|