Advertisement

கர்நாடகத்தில் ஒரே நாளில் 5,985 பேருக்கு கொரோனா பாதிப்பு

By: Karunakaran Mon, 10 Aug 2020 2:44:55 PM

கர்நாடகத்தில் ஒரே நாளில் 5,985 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நாட்டிலே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து கொண்டே சென்று கொண்டிருக்கிறது. கர்நாடகத்தில் தினமும் சராசரியாக 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் 7 ஆயிரத்தை தாண்டியது.

தினமும் 100 பேர் சராசரியாக கொரோனா பாதிப்பினால் உயிரிழந்து வருகின்றனர். கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 1 லட்சத்து 72 ஆயிரத்து 102 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. இந்நிலையில், நேற்று ஒரே நாளில் புதிதாக 5,985 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. கர்நாடகத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 107 பேர் பலியாகி உள்ளனர்.

karnataka,corona virus,corona death,corona prevalence ,கர்நாடகா, கொரோனா வைரஸ், கொரோனா மரணம், கொரோனா பாதிப்பு

தற்போது கர்நாடகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 78 ஆயிரத்து 87 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து 93 ஆயிரத்து 908 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 80 ஆயிரத்து 973 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கர்நாடகத்தில் நேற்று ஒரே நாளில் 107 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளதால், அங்கு கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 198 ஆக உயர்ந்துள்ளது.. பெங்களூருவில் மட்டும் 74 ஆயிரத்து 185 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அங்கு இதுவரை 1,240 பேர் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர்.

Tags :