- வீடு›
- செய்திகள்›
- கர்நாடகத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கடலோர மாவட்டங்கள் மற்றும் மாநிலத்தின் உள்மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்
கர்நாடகத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கடலோர மாவட்டங்கள் மற்றும் மாநிலத்தின் உள்மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்
By: vaithegi Sat, 03 Sept 2022 10:08:18 PM
கர்நாடகம் : கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்தது. மாநிலம் முழுவதும் இயல்பை விட கூடுதலாக மழை பெய்துள்ளது. இதனால் அணைகள், ஏரி, குளங்கள், நீர் நிலைகள் என்று அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இந்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பல்வேறு பகுதிகளில் நீரில் மூழ்கின. மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இதை அடுத்து தலைநகர் பெங்களூருவில் கடந்த வாரம் பெய்த கனமழையால் ரெயின்போ லே-அவுட் உள்பட பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இந்நிலையில் கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழையின் தீவிரம் குறைந்துள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதாவது கடலோர மாவட்டங்கள் மற்றும் வட கர்நாடகத்தின் உள்மாவட்டங்களில் பருவமழை குறைந்துள்ளதாக என தெரிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தட்சிண கன்னடா, உத்தரகன்னடா, சிக்கமகளூரு, மைசூரு, சிவமொக்கா, தாவணகெரே, சித்ரதுர்கா ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்துள்ளது. '
மேலும் கர்நாடகத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கடலோர மாவட்டங்கள் மற்றும் மாநிலத்தின் உள்மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. பெங்களூருவை பொறுத்தவரையில் இன்று சில நேரத்தில் லேசான மழை பெய்யலாம் என கூறியுள்ளது.