Advertisement

கர்நாடகத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 82 பேர் பலி

By: Karunakaran Mon, 27 July 2020 11:09:42 AM

கர்நாடகத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 82 பேர் பலி

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அசுரவேகத்தில் உள்ளது. கொரோனா பரவலை தடுக்க முன்களத்தில் நின்று பணியாற்றும் டாக்டர்கள், நர்சுகள், போலீஸ்காரர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கர்நாடகத்தில் ஏற்கனவே பாஜக எம்.எல்.ஏ.க்கள் பரத் ஷெட்டி, ராஜ்குமார் பட்டீல் தெல்கர், அனில் பெனகே, பாரண்ணா முனவள்ளி, மந்திரி சி.டி.ரவி, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அஜய்சிங், ரங்கநாத், சிவண்ணா, பிரசாந்த் அப்பய்யா, பரமேஸ்வர் நாயக், ராஜேகவுடா, ராஜசேகர் பட்டீல், மகாந்தேஷ் கவுஜலகி, சுயேச்சை எம்.எல்.ஏ. சரத்பச்சே கவுடா ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

karnataka,corona virus,corona prevalence,corona death ,கர்நாடகா, கொரோனா வைரஸ், கொரோனா பாதிப்பு, கொரோனா மரணம்

தற்போது பாஜக எம்.எல்.ஏ.வும், கர்நாடக வனத்துறை மந்திரியுமான ஆனந்த்சிங்குக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநிலத்தில் நேற்று 5,199 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 82 பேர் பலியாகியுள்ளனர். இதனால் கர்நாடகத்தில் கொரோனாவால் பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 96 ஆயிரத்து 141 ஆக அதிகரித்துள்ளது.

கர்நாடகத்தில் கொரோனாவுக்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 1,886 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் இதுவரை 35 ஆயிரத்து 838 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் அங்கு இதுவரை 11 லட்சத்து 76 ஆயிரத்து 827 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

Tags :