Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கேரளாவில் நாணயத்தை விழுங்கிய குழந்தையை மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்ததால் உயிரிழப்பு

கேரளாவில் நாணயத்தை விழுங்கிய குழந்தையை மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்ததால் உயிரிழப்பு

By: Karunakaran Sun, 02 Aug 2020 7:05:29 PM

கேரளாவில் நாணயத்தை விழுங்கிய குழந்தையை மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்ததால் உயிரிழப்பு

கேரள மாநிலம் ஆலுவாவை சேர்ந்த 3 வயது குழந்தை ஒன்று நாணயத்தை விழுங்கியது. இதனால், குழந்தைக்கு திடீரென முச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த குழந்தையின் பெற்றோர் உடனடியாக குழந்தையை அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது, குழந்தைக்கு எக்ஸ்-ரே எடுத்த மருத்துவர்கள் நாணயம் சிக்கி இருப்பதை கண்டறிந்தனர்.

ஆனால், கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் பகுதியில் இருந்து வந்ததால் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தலைமை மருத்துவர் கூறுகையில், அறுவை சிகிச்சை நிபுணர் இல்லாத காரணத்தால் குழந்தையை எர்ணாகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக தெரிவித்துள்ளார்.

kerala,swallowed,coin,hospital ,கேரளா, விழுங்கியது, நாணயம், மருத்துவமனை,

எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு அனுமதி கிடைக்காமல் ஆலப்புழா அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். குழந்தைக்கு பழங்கள் கொடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி சிகிச்சை அளிக்காமல் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். குழந்தையின் நிலை மிகவும் மோசமடைந்ததால், வேறு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் அம்மாநில மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா உத்தரவிட்டுள்ளார். மேலும் குற்றம் நிரூபணமாகும் பட்சத்தில், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

Tags :
|
|