Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

By: Monisha Sat, 22 Aug 2020 10:33:14 AM

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 67 ஆயிரத்து 430 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 53 ஆயிரத்து 413 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் சென்னையை தொடர்ந்து தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில், கடந்த 3 நாட்களாக குறைந்து வந்தது. ஆனால் நேற்று ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, மீண்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

krishnagiri district,corona virus,infection,treatment,discharge ,கிருஷ்ணகிரி மாவட்டம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,டிஸ்சார்ஜ்

அதன்படி, நேற்று ஓசூர் பகுதியில் 23 பேருக்கும், கிருஷ்ணகிரி பகுதியில் 5 பேருக்கும், காவேரிப்பட்டணம் பகுதியில் 14 பேருக்கும், ராயக்கோட்டை பகுதியில் 2 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டணத்தை சேர்ந்த 46 வயது டாக்டர், பாலக்கோடு அருகே செட்டிஅள்ளியை சேர்ந்த 23 வயது பெண் டாக்டர் ஆகியோருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மேலும், மத்தூர் பகுதியில் 3 ஆண்களுக்கும், வேப்பனப்பள்ளி பகுதியில் 2 பெண்களுக்கும் என மொத்தம் நேற்று ஒரு நாளில் மட்டும் 49 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,787 ஆக உயர்ந்துள்ளது. நேற்று சிகிச்சை பெற்று வந்தவர்களின் 32 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். தொடர்ந்து 282 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :