Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 8 ஆயிரத்து 369 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு

மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 8 ஆயிரத்து 369 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு

By: Karunakaran Wed, 22 July 2020 08:50:22 AM

மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 8 ஆயிரத்து 369 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நாட்டிலேயே கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்திலுள்ளது. கடந்த சில நாட்களாக மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில் மகாராஷ்டிர மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 8 ஆயிரத்து 369 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 27 ஆயிரத்து 31 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

maharashtra,corona prevalence,corona virus,corona death ,மகாராஷ்டிரா, கொரோனா பாதிப்பு, கொரோனா வைரஸ், கொரோனா மரணம்

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்புடைய 1 லட்சத்து 32 ஆயிரத்து 236 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 7 ஆயிரத்து 188 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 82 ஆயிரத்து 217 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் கொரோனா குணமடையும் விகிதம் 55.72% என்ற அளவில் உள்ளது. ஆனால் மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 246 பேர் உயிரிழந்ததால், மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 276 ஆக அதிகரித்துள்ளது. இதனால் அங்கு கொரோனா உயிரிழப்பு விகிதம் 3.75% என்ற அளவில் உள்ளது.

Tags :