Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை கோருவது வழக்கமாகி விட்டது - சிவசேனா

மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை கோருவது வழக்கமாகி விட்டது - சிவசேனா

By: Monisha Thu, 28 May 2020 11:40:56 AM

மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை கோருவது வழக்கமாகி விட்டது - சிவசேனா

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. இதனால் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசை எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா குற்றம்சாட்டி வருகிறது. கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் மகாராஷ்டிராவில் அரசியல் நெருக்கடியும் அதிகரித்து உள்ளது.

இந்தநிலையில், சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவின் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-

சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் மகா விகாஷ் அகாடி அரசாங்கம் 11 நாட்கள் கூட நீடிக்காது என எதிர்க்கட்சி கூறியது. ஆனால் இந்த அரசாங்கம் 6 மாதங்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

india,coronavirus,maharashtra,shiv sena,presidential regime,opposition party ,இந்தியா,கொரோனா வைரஸ்,மகாராஷ்டிரா,சிவசேனா,ஜனாதிபதி ஆட்சி,எதிர்க்கட்சி

கொரோனா பிரச்சினை இல்லாமல் நிலைமை சாதாரணமாக இருந்து இருந்தால், 6 மாதத்தை இந்த அரசாங்கம் நிறைவு செய்திருப்பதை குறிக்கும் வகையில் எதிர்க்கட்சிகளுக்கு விருந்து வைத்து இருப்போம். இப்போது இந்த அரசு கொரோனாவுக்கு எதிராக போராடுவதில் தான் கவனம் செலுத்துகிறது.

எதிர்க்கட்சி தெரிவித்து வரும் கருத்துகள் மகாராஷ்டிராவின் நலனுக்காக அல்ல. கவர்னர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி, அரசாங்கத்தை கவிழ்க்க திட்டமிடும் எதிர்க்கட்சியினரை கண்டிக்க வேண்டும்.

மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை கோருவது என்பது ஒரு வழக்கமான விவகாரமாகி விட்டது. இதற்கு பதில் அவர்கள் குஜராத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த கோர வேண்டும். எதிர்க்கட்சியின் பலம் 105 ஆக உள்ளது. அது அப்படியே இருக்க வேண்டும் என்பது தான் எங்களது விருப்பம். ஆனால் ஆளும் கூட்டணி அரசின் பலம் 170 ஆக உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|