Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மெல்போர்னில் இந்து கோவிலின் சுவரில் எழுதப்பட்டு இருந்த வாசகங்களால் பரபரப்பு

மெல்போர்னில் இந்து கோவிலின் சுவரில் எழுதப்பட்டு இருந்த வாசகங்களால் பரபரப்பு

By: Nagaraj Mon, 23 Jan 2023 10:20:37 PM

மெல்போர்னில் இந்து கோவிலின் சுவரில் எழுதப்பட்டு இருந்த வாசகங்களால் பரபரப்பு

மெல்போர்ன்: மெல்போர்னில் உள்ள இந்து கோவிலின் சுவரில் இந்தியா ஒழிக என்ற வாசகங்கள் எழுதப்பட்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆஸ்திரேலியாவில் சமீப காலமாக மதவெறி தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில், மெல்போர்னில் உள்ள மில் பூங்காவில் உள்ள சுவாமி நாராயண் இந்து கோவில் கடந்த 12ம் தேதி காலிஸ்தான் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டு, அதில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டன.

கோவிலின் சுவரில் இந்தியா ஒழிக என பொருள்படும் வகையிலான ஹிந்துஸ்தான் முர்தாபாத் வண்ணம் தீட்டப்பட்டுள்ளது,. இந்துக்களுக்கு எதிரான இந்த வெறுப்புச் செயல்களால் பல்வேறு இந்தியர்களும் சீக்கியத் தலைவர்களும் வருத்தமடைந்தனர். இதற்கு கேரள இந்து அமைப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

australia,hindu temple,khalistan,supporters attack, ,ஆதரவாளர்கள் தாக்குதல், ஆஸ்திரேலியா, இந்து கோவில், காலிஸ்தான்

கோவில் சுவர்களில் பிரதமர் மோடிக்கு எதிரான வாசகங்களும் எழுதப்பட்டன. இதைத் தொடர்ந்து கடந்த 16ம் தேதி மற்றொரு இந்து கோவில் காலிஸ்தான் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டது.

கேரம் டவுன்ஸில் உள்ள சிவ விஷ்ணு கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்களும் எழுதப்பட்டுள்ளன. இந்நிலையில், ஆல்பர்ட் பார்க் பகுதியில் உள்ள இந்து கோவிலான இஸ்கான் கோவில், இந்தியாவுக்கு எதிரான மற்றும் காலிஸ்தான் ஆதரவாளர்களால் சிதைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆஸ்திரேலியாவில் ஒரே மாதத்தில் 3வது முறையாக இந்து கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பக்தி யோகா இயக்கத்தில் ஈடுபட்டுள்ள புகழ்பெற்ற இஸ்கான் கோவிலின் சுவரில் காலிஸ்தான் வாழ்க என்று எழுதப்பட்டிருப்பதாக ஆஸ்திரேலியா பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. வழிபாட்டுத் தலத்தில் இதுபோன்ற அசிங்கமான செயல்களைக் கண்டு கோயில் நிர்வாக அதிகாரிகள் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்துள்ளனர்.

இந்து கோவில்கள் மீதான தொடர் தாக்குதல்கள் குறித்து மத தலைவர்கள் அவசர கூட்டத்தில் ஆலோசனை நடத்தி வரும் நிலையில், மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Tags :