Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மெக்சிகோவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.75 லட்சத்தைத் தாண்டியது

மெக்சிகோவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.75 லட்சத்தைத் தாண்டியது

By: Karunakaran Fri, 10 July 2020 09:08:54 AM

மெக்சிகோவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.75 லட்சத்தைத் தாண்டியது

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகள் கொரோனாவுக்கு எதிராக போராடி வருகின்றன. பல்வேறு நாடுகள் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இருப்பினும் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.

இந்த கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் மெக்சிகோ தற்போது 9-வது இடத்தில் உள்ளது. தற்போது, மெக்சிகோவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.75 லட்சத்தைக் கடந்துள்ளது.

mexico,coronavirus,corona prevalence,corona death ,மெக்ஸிகோ, கொரோனா வைரஸ், கொரோனா பாதிப்பு, கொரோனா மரணம்

மெக்சிகோவில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 32 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இருப்பினும், 1.67 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்புடைய 74 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 1.20 கோடியைக் கடந்துள்ளது.உலகம் முழுவதும் 5.50 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 70 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
|