Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மெக்சிகோவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டியது

மெக்சிகோவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டியது

By: Karunakaran Sat, 27 June 2020 12:00:37 PM

மெக்சிகோவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டியது

சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 98 லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் 4.94 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் 53 லட்சம் பேர் மீண்டுள்ளனர். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

coronavirus,mexico,corona death,corona infection ,கொரோனா வைரஸ், மெக்ஸிகோ, கொரோனா மரணம், கொரோனா தொற்று

இந்நிலையில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் 11-வது இடத்தில் உள்ள மெக்சிகோவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. மெக்சிகோவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும் அங்கு, கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

மெக்சிகோவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் ஒரு லட்சத்து16 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடைய 61 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Tags :
|