Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மெக்சிகோவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எணணிக்கை 2.5 லட்சத்தை தாண்டியது

மெக்சிகோவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எணணிக்கை 2.5 லட்சத்தை தாண்டியது

By: Nagaraj Mon, 06 July 2020 09:04:07 AM

மெக்சிகோவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எணணிக்கை 2.5 லட்சத்தை தாண்டியது

மெக்சிகோவில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.5 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.14 கோடியைக் கடந்துள்ளது. 5.34 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 64.5 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 205 உலக நாடுகளுக்கும் மேல் கொரோனா பரவியுள்ளது. இதனால் உயிரிழப்புகளும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

mexico,department of health,increase,corona,impact ,மெக்சிகோ, சுகாதாரத்துறை, அதிகரிப்பு, கொரோனா, பாதிப்பு

தற்போதைய நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் மெக்சிகோ 9-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் மெக்சிகோவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.5 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

ஒரு லட்சத்து 52 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 69 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மெக்சிகோ அரசு மேற்கொண்டு வருகிறது.

சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் உட்பட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Tags :
|
|