Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டத்தில், 2 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ இரயில் இயக்கம்

சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டத்தில், 2 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ இரயில் இயக்கம்

By: vaithegi Sun, 12 Mar 2023 5:17:12 PM

சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டத்தில், 2 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ இரயில் இயக்கம்

சென்னை : இரண்டாம் கட்டத்தில், 2 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ இரயில் இயக்க ... சென்னை மெட்ரோ ரயிலை தற்போதைய நிலையில் நாளொன்றுக்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தும் நிலையில், இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. சென்னை மெட்ரோ 2-ம் கட்டடத்தில் 118.9 கிலோமீட்டர் நீளத்திற்கு, நகரின் 128 ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது.

எனவே அதன்படி செzன்னை மெட்ரோ ரயில் கட்டம் இரண்டில் ஓட்டுனர் இல்லாத ரயில்களும், அதிவேக சேவைகளும் கிடைக்கும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதேபோன்று மெட்ரோ திட்டம் இரண்டு (Phase 2) தொடங்கப்பட்டபோது, 4 முதல் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட திட்டமிடப்பட்டது.

metro rail,chennai ,மெட்ரோ இரயில்,சென்னை


ஆனால் தற்போது சென்னை மெட்ரோ ரயில் பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில் ரயில் சேவைகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி 2 நிமிடங்களுக்கு 1 ரயில் இயக்கப்படவுள்ளது. அதிலும் குறிப்பாக 138 ஓட்டுநர் இல்லாத ரயில்கள் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது.

தற்போது சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்டத்தில் விம்கோ நகர் முதல் சென்ட்ரல் வரை 10 நிமிடத்திற்கு ஒரு ரயில் சேவை (peak hours) உச்ச நேரங்களில் இயக்கப்படுகிறது. சென்னை மெட்ரோ ரயில் திட்டம் ஒன்றில் 2.5 நிமிடங்களுக்கு ஒரு ரயில் சேவை வழங்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டாலும், போதிய மெட்ரோ ரயில்கள் இல்லாததால் 5 நிமிடத்திற்கு ஒரு சேவை வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் நாள்தோறும் சராசரியாக சென்னை மெட்ரோ ரயில் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 2.5 லட்சம் என உயர்ந்து வரும் நிலையில், சென்னை மெட்ரோ ரயில் ரயில் பெட்டிகளை அதிகரிக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் ஏற்கனவே திட்டமிட்டுள்ள நிலையில், கட்டம் இரண்டில் ரயில் சேவைகள் அதிகரிக்கவும் அதனை கட்டம் ஒன்றில் படிப்படியாக செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டு வருவதாக சென்னை மெட்ரோ அதிகாரிகள் அவர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

Tags :