Advertisement

புதுச்சேரியில் துணிவு படம் 1 மணி காட்சிக்கு அனுமதி

By: Nagaraj Tue, 10 Jan 2023 10:35:58 PM

புதுச்சேரியில் துணிவு படம் 1 மணி காட்சிக்கு அனுமதி

புதுச்சேரி: அதிகாலை 1 மணி காட்சிக்கு அனுமதி... நடிகர் அஜித் நடித்துள்ள ‘துணிவு’ திரைப்படம் வரும் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு துவங்கி விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில், புதுச்சேரியில் ‘துணிவு’ திரைப்படத்தின் நள்ளிரவு 1 சிறப்புக் காட்சி ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் வல்லவன் அறிவித்திருந்தார். இந்நிலையில் புதுச்சேரியில் ‘துணிவு’ திரைப்படம் திரையிடும் திரையரங்கு உரிமையாளர்கள் இன்று புதுச்சேரி கலெக்டரை நேரில் சந்தித்தனர்.

ajith,puducherry,thunivu,vallavan, ,அஜித், துணிவு, புதுச்சேரி, வல்லவன், எச்சரிக்கை

அப்போது, சிறப்புக் காட்சிக்கான முன்பதிவு டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்பனையாகி விட்டதால், பணத்தைத் திரும்பக் கொடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், ரசிகர்கள் ஆவேசத்தில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கலெக்டரிடம் முறையிட்டனர்.

இதை பரிசீலித்த கலெக்டர் வல்லவன், புதுச்சேரியில் நள்ளிரவு 1 மணிக்கு ‘துணிவு’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியை திரையிட அனுமதி அளித்துள்ளார். அதே சமயம் திரையரங்குகளில் கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

Tags :
|