Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதுச்சேரியில், தமிழகத்தை விட காய்கறி விலை பல மடங்கு உயர்வு

புதுச்சேரியில், தமிழகத்தை விட காய்கறி விலை பல மடங்கு உயர்வு

By: vaithegi Wed, 05 July 2023 11:50:30 AM

புதுச்சேரியில், தமிழகத்தை விட காய்கறி விலை பல மடங்கு உயர்வு

புதுச்சேரி: காய்கறி விலை பல மடங்கு அதிகமாக உயர்வு அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை .... கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் காய்கறி விலை அதிகரித்து கொண்டே வருகிறது. அதற்கு ஒரு படி மேல் சென்று புதுச்சேரியில் தமிழகத்தை விட காய்கறி விலை அதிகரித்துள்ளது.

இதுற்கு முன்னதாக புதுச்சேரியில் காய்கறி விலை குறைவாக இருக்கும். ஆனால் சமீப நாட்களாக காய்கறிகளில் கத்திரிக்காய், பீன்ஸ், தக்காளி, இஞ்சி, சின்ன வெங்காயம் போன்றவற்றின் விலை பல மடங்கு அதிகரித்து உள்ளது.

puducherry,vegetable price ,புதுச்சேரி,காய்கறி விலை

இதையடுத்து 1 கிலோ பீன்ஸ் ரூ.120, கத்திரிக்காய் ரூ. 100, வெங்காயம் ரூ. 130, நூக்கல் ரூ. 80, பீட்ரூட் ரூ. 50, கேரட் ரூ. 80 என அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

மேலும் அது மட்டுமில்லாமல் ரூ. 40க்கு விற்பனை செய்யப்பட்ட பச்சை மிளகாய் ரூ. 120 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெளிமாநிலங்களிலிருந்து காய்கறி வரத்து குறைவாக இருப்பதே விலை உயர்விற்கு காரணம் ஆகும். எனவே அரசு இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Tags :