Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதுக்கோட்டையில் இந்த தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

புதுக்கோட்டையில் இந்த தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

By: vaithegi Sat, 28 Jan 2023 8:36:36 PM

புதுக்கோட்டையில் இந்த தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் ஜனவரி மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 31ஆம் தேதி நடைபெறும் என்று ஆட்சியர் கவிதா ராமு அவர்கள் தெரிவித்துள்ளார்.இதனை அடுத்து இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுயிருப்பதாவது,

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜனவரி மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், 31.01.2023 செவ்வாய்கிழமை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின, விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளார்கள்.

pudukottai,farmers,grievance day meeting ,புதுக்கோட்டை,விவசாயிகள் ,குறைதீர்க்கும் நாள் கூட்டம்

எனவே, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டு விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளும் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி விட்டு கூட்டத்தில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது, என அவர் தெரிவித்துள்ளார்.

Tags :