Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதுவையில் ஜூலை 22 பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அன்று விடுமுறை அறிவிப்பு

புதுவையில் ஜூலை 22 பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அன்று விடுமுறை அறிவிப்பு

By: vaithegi Thu, 13 July 2023 12:06:52 PM

புதுவையில்  ஜூலை 22 பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அன்று விடுமுறை அறிவிப்பு

புதுச்சேரி : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து கொண்டு வருகிறது. இந்நிலையில், கனமழையின் எதிரொலியால் புதுச்சேரி மாநிலத்தில் கடந்த வாரம் 4 பிராந்தியங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

எனவே பள்ளி மாணவர்களுக்கு பருவமழையால் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் பள்ளி விடுமுறையை ஈடுகட்டும் விதமாக வருகிற ஜூலை 22ஆம் தேதி 4 பிராந்தியங்களில் உள்ள அனைத்து பள்ளிகளும் இயங்கும் என்று புதுவை கல்வித்துறை அறிவித்திருந்தது.

holiday,new ,விடுமுறை ,புதுவை


இந்த நிலையில், தற்போது ஜூலை 22 ஆம் தேதிக்கு பதிலாக காமராஜர் பிறந்த நாளான வருகிற ஜூலை 15 ஆம் தேதி சனிக்கிழமை 4 பிராந்தியங்களில் உள்ள அனைத்து பள்ளிகளும் இயங்கும் என்று புதுவை அரசு அறிவித்திருக்கிறது.

இதனை அடுத்து காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு சனிக்கிழமை பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுடன் பாயாசம் வழங்கப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags :