Advertisement

ரஷ்யாவில் கொரோனாவால் ஒரே நாளில் 5871 பேர் பாதிப்பு

By: Nagaraj Sat, 25 July 2020 8:15:05 PM

ரஷ்யாவில் கொரோனாவால் ஒரே நாளில் 5871 பேர் பாதிப்பு

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 5,871பேர் பாதிப்படைந்ததோடு, 146பேர் உயிரிழந்துள்ளதாக கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்த நான்காவது நாடான ரஷ்யாவில், மொத்தமாக எட்டு இலட்சத்து 6ஆயிரத்து 720பேர் பாதிப்படைந்துள்ளனர். மேலும், 13 ஆயிரத்து 192 பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

corona,russia,vulnerability,increase,healed ,கொரோனா, ரஷ்யா, பாதிப்பு, அதிகரிப்பு, குணமடைந்தவர்கள்

ஒரு இலட்சத்து 96ஆயிரத்து 388பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் ஐந்து இலட்சத்து 97ஆயிரத்து 140பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவல் தற்போது அதிகரித்து கொண்டே இருப்பதால் உலக நாடுகள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியும், அச்சமும் ஏற்பட்டுள்ளது. இதுவரை 205க்கு மேற்பட்ட உலகநாடுகளில் கொரோனா பரவி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அமெரிக்காவில் பாதிப்பு அதிகம்.

Tags :
|
|