Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரஷ்யாவில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்தது

ரஷ்யாவில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்தது

By: Nagaraj Fri, 10 July 2020 8:59:29 PM

ரஷ்யாவில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்தது

பலியானவர்கள் எண்ணிக்கை உயர்வு... ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்தது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ரஷ்யாவில் இதுவரை 11 ஆயிரத்து 17பேர் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்றினால் 6,635 பேர் பாதிப்படைந்ததோடு, 174பேர் உயிரிழந்துள்ளதாக ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது.

russia,corona,victims,2300,anxious ,ரஷ்யா, கொரோனா, பலியானவர்கள், 2300 பேர், கவலைக்கிடம்

இதற்மைய, உலகளவில் கொவிட்-19 தொற்றினால் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்த நான்காவது நாடான ரஷ்யாவில் இதுவரை ஏழு இலட்சத்து 13ஆயிரத்து 936பேர் பாதிப்படைந்துள்ளனர்.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 213,851பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் 489,068பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர 2,300பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

Tags :
|
|
|