Advertisement

சவுதியில் அனைத்து ஊழியர்களும் சீருடை அணிவது கட்டாயம்

By: Nagaraj Sat, 12 Sept 2020 08:53:38 AM

சவுதியில் அனைத்து ஊழியர்களும் சீருடை அணிவது கட்டாயம்

சீருடை கட்டாயம்... சவுதியில் பணிபுரியும் அனைத்து தரப்பு ஊழியர்களும் சீருடை அணிய வேண்டும் என மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சர் அகமது பின் சுலைமான் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு துறையிலும், ஊழியர்களின் இணக்கத்தை உறுதி செய்யும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

uniform,compulsory,employees,saudi,labor law ,சீருடை, கட்டாயம், ஊழியர்கள், சவுதி, தொழிலாளர் சட்டம்

மேலும், ஆண்-பெண் என அவர்களது பணிக்கு ஏற்றவாறு சீருடை இருக்கவேண்டும் என கூறினார்.

இந்த அமைச்சரவை ஆணை சவுதி தொழிலாளர் சட்டத்தின் 38 வது பிரிவின் ஒரு பகுதியாக பணியிடத்தில் பின்பற்றப்படும். மேலும், சீருடை அணியாத ஊழியர்களுக்கு நிர்வாகத்தினர் அபராதம் விதிக்கவேண்டும் என கூறியுள்ளார்.

Tags :
|