Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இலங்கையில் 3 மாதங்களுக்கு பின்னர் பள்ளிகள் மீண்டும் திறப்பு

இலங்கையில் 3 மாதங்களுக்கு பின்னர் பள்ளிகள் மீண்டும் திறப்பு

By: Nagaraj Tue, 07 July 2020 2:13:01 PM

இலங்கையில் 3 மாதங்களுக்கு பின்னர் பள்ளிகள் மீண்டும் திறப்பு

3 மாதங்கள் கழித்து இலங்கையில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. கொரோனா அச்சத்தில் இருந்து மக்கள் மீண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படடுள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட மார்ச் 20 முதல் நாடு முழுவதும் முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டது. பின்னர் படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வந்தன.

sri lanka,corona,schools opening,students ,இலங்கை, கொரோனா, பள்ளிகள் திறப்பு, மாணவர்கள்

இலங்கையின் ஒட்டுமொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2000 ஆகும். அவர்களில் 11 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, கடந்த மாதம் முழு முடக்கம் விலக்கி கொள்ளப்பட்டது. இந்நிலையில், இலங்கையில் 115 நாட்களுக்கு பிறகு தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

கிரேடு 5,11,13 ஆகிய மாணவர்களுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. கிரேடு 12 மற்றும் கிரேடு 10 ஆகிய மாணவர்களுக்கு ஜூலை 20ம், 27ம் தேதி முதல் கிரேடு 3,4,6,7,8,9 ஆகிய மாணவர்களுக்கான வகுப்புகளும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|