Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 2,174 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு

தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 2,174 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு

By: Monisha Thu, 18 June 2020 10:28:32 AM

தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 2,174 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. நாளுக்குநாள் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாடு முழுவது சில தளர்வுகளுடன் ஜூன் 30-ம் தேதி வரை 5-ம் கட்ட ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.

இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலத்தில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று ஒரே நாளில் 2,174 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 14 நாட்களுக்கு மேலாக தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் இதுவரை இல்லாத வகையில் முதன்முறையாக நேற்று 2 ஆயிரத்தை தாண்டி 2,174 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்து 50,193 ஆக அதிகரித்துள்ளது.

india,coronavirus,tamil nadu,curfew,chennai ,இந்தியா,கொரோனா வைரஸ்,தமிழ்நாடு,ஊரடங்கு,சென்னை

நேற்று 48 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு 576 ஆக அதிகரித்துள்ளது. 842 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 27,624 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். நேற்று 24,621 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களாக சென்னை, திருவள்ளுர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் உள்ளன. எனவே இங்கு நாளை முதல் ஜூன் 30 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Tags :
|
|