Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பரிசோதனை; ஒரே நாளில் 60,112 மாதிரிகள் பரிசோதனை

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பரிசோதனை; ஒரே நாளில் 60,112 மாதிரிகள் பரிசோதனை

By: Monisha Thu, 23 July 2020 09:46:02 AM

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பரிசோதனை; ஒரே நாளில் 60,112 மாதிரிகள் பரிசோதனை

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் உச்சகட்டமாக 5 ஆயிரத்து 849 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விவரங்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 86 ஆயிரத்து 492 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் அடங்குவர்.

நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 51 ஆயிரத்து 765 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், நோய் பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 910 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 31 ஆயிரத்து 583 ஆக அதிகரித்துள்ளது.

tamil nadu,corona virus,testing,health department ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,பரிசோதனை,சுகாதாரத்துறை

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 74 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 700 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரிசோதனையின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் புதிய உச்சமாக 58 ஆயிரத்து 475 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20 லட்சத்து 15 ஆயிரத்து 147 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், மாநிலம் முழுவதும் நேற்று ஒரே நாளில் மட்டும் உச்சபட்சமாக 60 ஆயிரத்து 112 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் மக்களிடம் இருந்து எடுக்கப்பட்ட பரிசோதனை மாதிரிகளின் மொத்த எண்ணிக்கை 20 லட்சத்து 95 ஆயிரத்து 757 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :