Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பலி...ஒரே நாளில் 97 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பலி...ஒரே நாளில் 97 பேர் உயிரிழப்பு

By: Monisha Sat, 01 Aug 2020 09:52:50 AM

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பலி...ஒரே நாளில் 97 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 935 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 881 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 45 ஆயிரத்து 859 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் அடங்குவர்.

நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் தற்போது 57 ஆயிரத்து 968 பேர் பல்வேறு மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் சிகிச்சைக்கு பின் நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 778 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 83 ஆயிரத்து 956 ஆக அதிகரித்துள்ளது.

tamil nadu,corona virus,infection,treatment,deaths ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

ஆனாலும், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மாநிலத்தில் புதிய உச்சமாக நேற்று வைரஸ் தாக்குதலுக்கு ஒரே நாளில் 97 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 935 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக கொரோனாவுக்கு பலியானோர் விவரம்:-
அரியலூர் - 7
செங்கல்பட்டு - 248
சென்னை - 2,113
கோவை - 54
கடலூர் - 31
தர்மபுரி - 4
திண்டுக்கல் - 50
ஈரோடு - 9
கள்ளக்குறிச்சி - 23
காஞ்சிபுரம் - 111
கன்னியாகுமரி - 39
கரூர் - 9
கிருஷ்ணகிரி - 14
மதுரை - 237
நாகை - 8
நாமக்கல் - 6
நீலகிரி - 2
பெரம்பலூர் - 3
புதுக்கோட்டை - 25
ராமநாதபுரம் - 64
ராணிப்பேட்டை - 32
சேலம் - 31
சிவகங்கை - 43
தென்காசி - 19
தஞ்சாவூர் - 28
தேனி - 62
திருப்பத்தூர் - 16
திருவள்ளூர் - 239
திருவண்ணாமலை - 62
திருவாரூர் - 9
தூத்துக்குடி - 47
திருநெல்வேலி - 38
திருப்பூர் - 10
திருச்சி - 60
வேலூர் - 61
விழுப்புரம் - 35
விருதுநகர் - 85

Tags :