Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் கோழித்தீவன மூலப்பொருட்கள் விலை உயர்வால் முட்டை கொள்முதல் விலை உயர்வு

தமிழகத்தில் கோழித்தீவன மூலப்பொருட்கள் விலை உயர்வால் முட்டை கொள்முதல் விலை உயர்வு

By: vaithegi Sat, 02 July 2022 4:22:59 PM

தமிழகத்தில் கோழித்தீவன மூலப்பொருட்கள் விலை உயர்வால்  முட்டை கொள்முதல் விலை உயர்வு

தமிழகம் : தமிழகம் முழுவதும் முட்டையின் நுகர்வை அடிப்படையாக கொண்டு தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு என்ற தனியார் அமைப்பு மூலமாக முட்டை கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

அதன்படி நாமக்கல் மண்டலத்தில் பண்ணைகளில் கொள்முதல் செய்யப்படும் முட்டை விலை நிர்ணயிக்கப்படுகிறது. முட்டை கொள்முதல் விலை கடந்த வாரத்தில் 15 காசுகள் உயர்த்தப்பட்டு முட்டை கொள்முதல் விலை 535 காசுகள் என விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று மேலும் 15 காசுகள் உயர்த்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முடிவு செய்தது.

அதன்படி முட்டை கொள்முதல் விலை 550 காசுகளாக தற்போது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த முட்டை விலை கடந்த 40 ஆண்டு கால கோழிப்பண்ணை வரலாற்றில் 550 காசாக விற்பனை செய்யப்படுவது இதுவே 2வது முறையாக ஆகும். ஆனால் சில்லறை விற்பனை விலையில் ஒரு முட்டை ரூ.6 அல்லது ரூ.6க்கும் அதிகமாக விற்பனையாகிறது.

eggs,purchase price ,முட்டை ,கொள்முதல் விலை

தமிழகத்தில் கோழித்தீவன மூலப்பொருட்கள் விலை உயர்ந்துள்ளதால் முட்டை கொள்முதல் விலை உயர்ந்துள்ளது.

இனிவரும் காலங்களில் முட்டை கொள்முதல் விலை ரூ.6 ஆக உயர வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த விலை உயர்வுக்கு கோழித்தீவன மூலப்பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள 5% ஜிஎஸ்டி வரியே முக்கிய காரணமாக அமைகிறது.

அதனால் இதன் மீது விதிக்கப்பட்டுள்ள 5% ஜிஎஸ்டியை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கத்தின் தலைவர் கோரிக்கை வைத்துள்ளார்.

Tags :
|