Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகம், புதுவையில் இயல்பான மழையின் அளவை விட 94 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது.. சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி

தமிழகம், புதுவையில் இயல்பான மழையின் அளவை விட 94 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது.. சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி

By: vaithegi Wed, 03 Aug 2022 4:29:16 PM

தமிழகம், புதுவையில் இயல்பான மழையின் அளவை விட 94 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது.. சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி

சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட அதிகமாக பெய்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கேரளாவில் பருவமழைமிக தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் வளிமண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது.

மேலும் தமிழகத்தின் வளிமண்டல பகுதியின் மத்திய பகுதியில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கின்ற சேசோன் பகுதி நிலவுகிறது.இந்த பகுதி அடுத்து வரும் தினங்களில் வடக்கு நோக்கி நகர கூடும் என்றார். தென்மேற்கு பருவ மழையை பொருத்தவரையில் கடந்த ஜூன் மாதம் 1ம் தேதி முதல் நேற்று வரையான காலக்கட்டத்தில் தமிழகம், புதுவையில் 242 மி.மீ மழை பதிவாகி உள்ளது.

rainfall,chennai meteorological centre ,மழை ,சென்னை வானிலை ஆய்வு மையம்

இதை அடுத்து இக்கால கட்டத்தில் இயல்பான மழை அளவு 125 மி.மீ ஆகும். இயல்பான மழையின் அளவை விட 94 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது. தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாகவே பெய்து கொண்டு வருகிறது. இந்த ஆண்டும் அதிக அளவில் மழை பெய்துள்ளது.

மேலும் இது தொடர்ந்து பேசிய அவர், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் மழை பெய்துள்ளது 10 இடங்களில் கனமழையும் நான்கு இடங்களில் லேசான மழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக சின்ன கல்லாரில் 13 cm மழை பதிவாகியுள்ளது என்ற அவர், வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக் கூடும் என்றார்.

மேலும், தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, மாவட்டங்களில் ஆகஸ்ட் 2 மற்றும் 3 தேதிகளில் ஒரு சில இடங்களில் அதிகமான மழைக்கு வாய்ப்புள்ளது என அவர் கூறினார்.


Tags :