Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் விமான நிலையங்களில் குரங்கம்மை பரிசோதனை தீவிரம்

தமிழகத்தில் விமான நிலையங்களில் குரங்கம்மை பரிசோதனை தீவிரம்

By: vaithegi Sat, 16 July 2022 3:58:33 PM

தமிழகத்தில் விமான நிலையங்களில் குரங்கம்மை பரிசோதனை தீவிரம்

தமிழகம் : உலகம் முழுவதும் தற்போது குரங்கு அம்மை நோய் தொற்று பரவி கொண்டு வருகிறது. அதன்படி தற்போது இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குரங்கம்மை ஆரம்பகட்டத்தில் காய்ச்சல், தலைவலி, வீக்கம், முதுகு வலி, தசை வலி, சோர்வு ஆகிய அறிகுறிகள் தென்படும். அத்துடன் உடல் குளிர்ச்சி நிணநீர் கணுக்களில் வீக்கம் ஆகியவை மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இந்த குரங்கு அம்மை வைரஸ் தொற்றால் இறப்பு நேரிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதனால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். நமது தோலில் ஏற்பட்ட காயங்கள் மற்றும் மூச்சுக்குழாய் வழியாக வைரஸ் பரவும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

inspection,airports ,பரிசோதனை ,விமான நிலையங்கள்

இந்த நோயால் பாதிக்கப்பட்ட குரங்கு, அணில், எலி போன்ற விலங்குகள் மூலம் இத்தொற்று பரவுவதாகவும் கூறப்படுகிறது. மற்ற நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் குரங்கு அம்மை வைரஸ் பாதிப்பு உண்டாகி உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்த ஒருவருக்கு குரங்கு காய்ச்சலின் அறிகுறி தென்பட்டது. இதனால் கேரள மாநில எல்லைகளில் கண்காணிப்பு மிக தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நோய் அறிகுறிகளுடன் வருபவர்கள் தனிமைப் படுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், குரங்கம்மை காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்த சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது.

அதில் முதல் கட்டமாக போதுமான விழிப்புணர்வு மக்களுக்கு தேவை என அறிவுறுத்தி உள்ளது. குரங்கு அம்மை காய்ச்சலுக்கு இன்னும் தனிப்பட்ட சிகிக்சை முறைகள் இல்லை, பொதுவாக ஆண்டி வைரல் மருந்து மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பன்னாட்டு விமான நிலையங்களில் விமான நிலையங்களில் குரங்கம்மை பரிசோதனை மிக தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் விமானப் பயணிகளுக்கு குரங்கு அம்மை பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Tags :