Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் மாஸ்க் அணியாமல் வந்தால் மதுபானம் கிடையாது என தெரிவிப்பு

தமிழகத்தில் மாஸ்க் அணியாமல் வந்தால் மதுபானம் கிடையாது என தெரிவிப்பு

By: vaithegi Tue, 28 June 2022 8:32:11 PM

தமிழகத்தில் மாஸ்க் அணியாமல் வந்தால் மதுபானம் கிடையாது என தெரிவிப்பு

தமிழகம்: நாடு முழுவதும் பல மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் தினசரி பாதிப்பு அதிகமாக இருக்கிறது. தினசரி பாதிப்பு ஆயிரத்திற்கு அதிகமாக இருக்கிறது. அதனால் தொற்று எண்ணிக்கை அதிகமாக உள்ள மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகளை அமல்படுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக மதுபான கடைகளில் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை மீண்டும் கடைபிடிக்குமாறு மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

அது குறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. எனவே மக்கள் பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதே போல மதுபான கடைகளிலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதன் படி தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகமாக இருக்கிறது.

alcohol,mask ,மதுபானம் ,மாஸ்க்

அதனால் மாஸ்க் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்கப்பட வேண்டும். மது வாங்க கூட்டமாக நிற்க கூடாது எனவும், மது வாங்க இடைவெளி விட்டு வரிசையில் நிற்க சொல்லி மதுபான கடை ஊழியர்கள் அறிவுறுத்த வேண்டும். மேலும் மதுபான கடை ஊழியர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும். அவர்களது கைகளை அடிக்கடி கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

மேலும் தினமும் டாஸ்மாக் கடைகள் சுத்தம் செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட மேலாளர்களும், ஊழியர்களும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் எனவும் அவ்வாறு கடைபிடிக்காமல் இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :