Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் இன்று செப். 17 முதல் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று செப். 17 முதல் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

By: vaithegi Sat, 17 Sept 2022 4:37:17 PM

தமிழகத்தில் இன்று செப். 17 முதல் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று செப். 17 முதல் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 17.09.2022 முதல்‌ 19.09.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

இதனை அடுத்து 20.09.2022 மற்றும்‌ 21.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்‌சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌ என அறிவித்துள்ளது.

heavy rain,chennai ,கனமழை,சென்னை

மேலும் மீனவர்களுக்கான எச்சரிக்கை 19.09.2022: மத்திய மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்தில் வீசக்கூடும்‌ எனவும் தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து 20.09.2022 மற்றும்‌ 21.09.2022: மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ இலங்கை கடற்கரையை ஓட்டிய தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்தக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 இலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

Tags :